ஜூனியர் ஆசிய கோப்பை: யு.ஏ.இ. அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.அடுத்து ஆடிய இந்தியா விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஜூனியர் ஆசிய கோப்பை: யு.ஏ.இ. அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
Published on

ஷார்ஜா:

11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற யு.ஏ.இ. பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 44 ஓவரில் 137 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ரேயான் கான் அதிகபட்சமாக 35 ரன்னும், அக்ஷத் ராய் 26 ரன்னும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் யுதாஜித் குஹா 3 விக்கெட்டும், சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 138 என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் கடந்தனர். ஆயுஷ் மாத்ரே 67 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 76 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com