இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்.. 2வது நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு இந்தியா 460 ரன்கள்

ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தேவ்தத் படிக்கல்
தேவ்தத் படிக்கல்
Published on

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

காலே நகரில் நேற்று தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 288 ரன் சேர்த்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டம்

இன்றைய ஆட்டம் மழை காரணமாக தாமதமான நிலையில் மீண்டும் தொடங்கியது.

படிக்கல்லும், பன்ட்டும் இன்று 2வது நாள் ஆட்டத்தை துவங்கினர். பன்ட் 39 ரன்னில் அவுட்டான பிறகு, கேஎல் ராகுல் பேட் செய்ய வந்தார்.

கேஎல் ராகுல், இன்றைய ஆட்டத்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 82 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெல் அரைசதம் கடந்து 51 ரன்கள் சேர்த்தார்.

இலங்கை அணியின் அறிமுக வீரரான கேஷர நுவாந்தா, ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் தேவ்தத் படிக்கல் தனது டெஸ்ட் வாழ்க்கையின் முதல் சதத்தைப் பதிவு செய்து, 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 230 பந்துகளில் 167 ரன்கள் குவித்தார்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 460 ரன்கள் எடுத்துள்ளது.

படிக்கல் சாதனை

இலங்கைக்கு எதிராக 3வது வரிசை வீரராக களமிறங்கி 150 ரன்கள் எடுத்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை தேவ்தத் படிக்கல் படைத்துள்ளார்.

முன்னதாக 2009 இல் ராகுல் டிராவிட் 177 ரன்கள் எடுத்து முதலிடத்திலும், 2017ஆம் ஆண்டு புஜாரா 153 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com