டி20 உலகக் கோப்பையில் புதிய சாதனை படைத்த இந்தியா

இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 20 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார். அவர் பவர் பிளே கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார்.
டி20 உலகக் கோப்பையில் புதிய சாதனை படைத்த இந்தியா
Published on

புதுடெல்லி:

டி20 உலகக் கோப்பைத் தொடரின் 18வது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில் இந்தியா, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடியது. சஞ்சு சாம்சன் 8 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இஷான் கிஷனுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். அதிரடியில் மிரட்டிய இஷான் கிஷன் பவர் பிளேவின் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார். அவர் 20 பந்தில் அரைசதம் விளாசி அசத்தினார். அதனால் இந்திய அணி 6.5 ஓவரில் 100 ரன்களைக் கடந்து சாதனை படைத்தது.

இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 100 ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 7 ஓவரில் 100 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com