ஆசிய விளையாட்டு கிரிக்கெட்: இலங்கையை சுருட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா

முதல் அரையிறுதியில் வங்கதேசம் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது.
india
Published on: 
Summary

ஆசிய விளையாட்டின் கிரிக்கெட்டில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், நேபாளம் மற்றும் மலேசியா அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.

காலிறுதி சுற்று போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இன்று நடந்த முதல் அரையிறுதியில் வங்கதேசம் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது.

இந்நிலையில் 2வது அரையிறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

இஷான் கிஷன் 80 ரன்

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் 46 பந்தில் 80 ரன்கள் குவித்தார். வைபவ் சூர்யவன்ஷி 38 ரன்கள் எடுத்தார்.

45 ரன்னில் சுருண்ட இலங்கை

இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 9.5 ஓவரில் 45 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் பும்ரா, அக்சர் படேல், அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

வரும் 3-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com