டி20 உலகக் கோப்பை: நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 209 ரன்கள் குவித்தது.
டி20 உலகக் கோப்பை: நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
Published on

புதுடெல்லி:

டி20 உலகக் கோப்பை தொடரின் 18-வது லீக் போட்டியில் இந்தியா, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 24 பந்தில் 61 ரன்கள் குவித்தார். பாண்ட்யா 28 பந்தில் 52 ரன்கள் குவித்தார்.

நமீபியாவின் ஜெர்ஹார்டு எராமஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நமீபியா களமிறங்கியது. ஸ்டீன் கேம்ப் 29 ரன்னும், ஜேன் பிரிலிங்க் 22 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், நமீபியா 18.2 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், பாண்ட்யா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com