கான்பூர் டெஸ்ட்: மழையால் ஒரு பந்து கூட வீசாமல் 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால், முதல்நாள் போட்டி பாதிக்கப்பட்டது.
ind vs ban test play called off due to rain
Published on

இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்த போது மழை குறுக்கிட்டதால், முதல்நாள் போட்டி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

முதல் நாளில் வங்கதேசம் அணியின் மொமினுல் 40 ரன்களுடனும், முஷ்ஃபிகுர் ரகுமான் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இன்று 2-ம் நாள் ஆட்டம் துவங்கவிருந்த நிலையில், மைதானத்தில் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் ஒரு பந்து கூட வீசப்படாமல் 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com