ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை: இந்தியா ஏ அணியில் அபிஷேக் சர்மா, சூர்யவன்ஷி

ரஜத் படிதார் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அபிஷேக் சர்மா- சூர்யவன்ஷி
அபிஷேக் சர்மா- சூர்யவன்ஷி
Published on: 

கத்தார் நாட்டின் தோகாவில் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா `ஏ' அணி கலந்து கொண்டு விளையாட இருக்கிறது. திலக் வர்மா தலைமையில் இதற்கான இந்தியா `ஏ' அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜத் படிதார்

ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் அணியில் இடம் பிடித்துள்ளார். டி20 அதிரடி வீரர்களான சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

காயம் காரணமாக ஜூலை மாதத்தில் இருந்து விளையாடாமல் இருந்து ஹர்ஷித் ராணா மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்தியா ஏ அணி பின் வருமாறு:-

திலக் வர்மா (கேப்டன்), அபிஷேக் சர்மா, சூர்யவன்ஷி, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ரஜத் படிதார் (துணைக் கேப்டன்), ரிங்கு சிங், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), சூர்யான்ஷ் ஷெட்ஜெ, ஷெபாஸ் அகமது, விப்ராஜ் நிகம், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ், அர்ஷத் கான்.

குரூப் பி-யில் இந்திய `ஏ'

50 ஓவர் கிரிக்கெட் தொடரான இதில் குரூப் பி-யில் இந்தியா `ஏ', யுஏஇ, நேபாளம், பாகிஸ்தான் `ஏ' அணிகள் இடம் பிடித்துள்ளன. `ஏ' பிரிவில் வங்கதேசம் `ஏ', இலங்கை `ஏ', ஆப்கானிஸ்தான் `ஏ', ஹாங்காங், சீனா அணிகள் இடம் பிடித்துள்ளன.

X