ஹர்திக் பாண்ட்யாவின் நிறைவடையாத டீல்: மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்?

ஹர்திக் பாண்ட்யா வேறு அணிக்கு செல்ல இருக்கும் டீல் இன்னும் முடிவடையாமல் உள்ளது.
ஹர்திக் பாண்ட்யா
ஹர்திக் பாண்ட்யா
Published on
Summary

ரோகித் சர்மா, பும்ரா, திலக் வர்மா ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.

ஐ.பி.எல். லீக்கில் முன்னணி அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். இந்த அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா உள்ளார். ஐந்து முறை சாம்பியன் பட்டம் வாங்கிக் கொடுத்த ரோகித் சர்மாவுக்குப் பதிலாக இவரை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமித்தது.

அதில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அணிக்குள்ளே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இறுதியாக ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற முடிவு செய்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட பல அணிகள் இவரை வாங்க முயற்சி மேற்கொண்டு இருக்கின்றன. ஆனால், ஹர்திக் பாண்ட்யா வேண்டுமென்றால் பெரும்தொகையுடன் சில வீரர்களும் வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் கோரிக்கை வைக்கிறது.

இதனால் டீல் இன்னும் நிறைவடையவில்லை. நிறைவடையாமல் போகலாம் என்ற செய்தியும் வெளியாகியுள்ளன. ஆகவே, மும்பை இந்தியன்ஸ் அணியில் நீடிக்க வாய்ப்புள்ளது.

அப்படி நீடித்தால், ஹர்திக் பாண்ட்யா கேப்டன் பதவியில் இருக்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி என்றால் யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரோகித் சர்மா

ரோகித் சர்மா இந்தியாவுக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவில் மட்டுமே விளையாடி வருகிறார். இவர் நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதேவேளையில் பும்ராவும் போட்டியில் இருக்கிறார்.

இருவரையும் தவிர்த்து நீண்ட பலனை கருத்தில் கொண்டால், திலக் வர்மாவை கேப்டனாக்கலாம் என்ற வாய்ப்பும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்திய டி20 அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக திகழ்கிறார். பகுதி நேர கேப்டனாகவும் செயல்படும் நிலையில் உள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com