ஓவரா செலிபிரேசன் செய்வதா? இந்திய பவுலர் குர்னூர் பிராரை தண்டித்தது ஐசிசி

டிம் செய்ஃப்பெர்ட் விக்கெட்டை ஆக்ரோஷமாக கொண்டாடியதால் போட்டி தகுதி நீக்க புள்ளி.
குர்னூர் பிரார்
குர்னூர் பிரார்
Published on: 
Summary

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிராருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு தகுதிக் குறைப்பு புள்ளியை (Demerit Point) வழங்கியுள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட்டின் விக்கெட்டை வீழ்த்திய குர்னூர் பிரார், ஆக்ரோஷமாக அவருக்கு விடை கொடுக்கும் வகையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

செய்ஃபெர்ட் அவுட்டை கொண்டாடிய குர்னூர் பிரார்

குர்னூர் பிரார் வீசிய 12-வது ஓவரின் பந்தில் செய்ஃபெர்ட் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது செய்ஃபெட்டுக்கு மிக அருகில் சென்று ஆக்ரோஷமாகச் சைகை செய்ததுடன், சில வார்த்தைகளையும் பரிமாறிக்கொண்டார்.

ஐசிசி அபராதம்

இதையடுத்து, ஐசிசி நடத்தை விதிமுறைகளின் 2.5-வது பிரிவை மீறியதாக பிரார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த விதி, ஆட்டமிழந்த வீரரை அவமதிக்கும் அல்லது அவரை ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றத் தூண்டும் செயல்களைத் தடை செய்கிறது.

தனது தவறை ஒப்புக்கொண்ட பிரார், போட்டி நடுவர் ரஞ்சன் மதுகலே வழங்கிய தண்டனையையும் ஏற்றுக்கொண்டார். இதனால் விசாரணை நடத்தப்படவில்லை.

இதுவரை 2 புள்ளிகள் பெற்ற குர்னூர் பிரார்

ஏற்கனவே 24 மாத காலத்திற்குள் ஒரு முறை விதிமீறலில் ஈடுபட்டிருந்ததால், தற்போது அவருடைய மொத்த தகுதிக் குறைப்பு புள்ளிகள் இரண்டாக உயர்ந்துள்ளன.

ஒரு வீரர் 24 மாதங்களுக்குள் நான்கு புள்ளிகளைப் பெற்றால், அவை தடைப் புள்ளிகளாக மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய குர்னூர் பிரார் தொடர் நாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

X