ஐசிசி தரவரிசை: சரிவை சந்தித்த பும்ரா, சுப்மன் கில்

தரவரிசையில் ரிஷப் பண்ட் 7-வது இடத்தில் நீடிக்கிறார்.
gill, bumrah
Published on
Summary

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

பின்தங்கிய கில்

சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் விளையாடிய 3 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்த சுப்மன் கில், பேட்டிங் தரவரிசையில் இரு இடங்கள் சரிந்து 9-வது இடம் பிடித்துள்ளார்.

தரவரிசையில் ரிஷப் பண்ட் 7-வது இடத்தில் நீடிக்கிறார்.

முன்னேறிய படிக்கல்

இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது 11-வது இடத்தை தக்கவைத்துக்கொண்டு டாப்-10 பட்டியலுக்கு மிக அருகில் உள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 328 ரன்கள் குவித்து, இரு சதங்களை விளாசிய தேவ்தத் படிக்கல் 5 இடம் முன்னேறி 54-வது இடம் பிடித்துள்ளார்.

பும்ரா பின்னடைவு

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த பும்ரா தற்போது மூன்றாவது இடத்திற்குச் சரிந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்திலும், நியூசிலாந்தின் மேட் ஹென்றி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com