

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த பல சீசன்களாக டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. இதையடுத்து, ஐபிஎல் 2025 தொடருக்கு முன் ஹேமங் பதானி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். புதிய கேப்டனாக அக்சர் படேல் நியமனம் செய்யப்பட்டார்.
அதன்பிறகும் டெல்லி அணி நிலைமை மாறவில்லை. 2025, 2026 சீசன்களிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.
இதைத் தொடர்ந்து, ஹேமங் பதானியை விடுவிக்க டெல்லி அணி நிர்வாகம் முடிவு செய்தது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி 2027, ஐபிஎல் சீசனுக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
ஏற்கனவே, 2019 முதல் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆலோசகராக பணியாற்றினார். மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் இயக்குநராகவும் சவுரவ் கங்குலி பணியாற்றியுள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் இவரின் நியமனத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
ஹேமங் பதானிக்குப் பதிலாக கங்குலி இந்தத் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.