

2027-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மினி ஏலம் கோவாவில் டிசம்பர் 16-ம் தேதி நடத்தப்படும் என தகவல் வெளியானது.
இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலம் இந்தியாவில் நடத்தப்பட்டது.
கடந்த 3 சீசன்களில் ஐ.பி.எல். ஏலம் வெளிநாடுகளில் நடைபெற்றது. 2024-ம் ஆண்டு ஏலம் துபாயிலும், 2025-ம் ஆண்டு மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலும், 2026-ம் ஆண்டு ஏலம் அபுதாபியிலும் நடைபெற்றது.
இதற்கிடையே, அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது.
அடுத்த ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி தொடங்கி மே 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், 2027-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மினி ஏலம் கோவாவில் டிசம்பர் 16-ம் தேதி நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
கோவாவில் உள்ள ஐசிடி கிராண்ட் எனும் ஐந்து நட்சத்திர விடுதியில் மினி ஏலம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி டிசம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.