

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகிய ஸ்டீபன் பிளமிங், பந்து வீச்சு பயிற்சியாளருடன் இங்கிலாந்து அணியின் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தை சேர்ந்த ஸ்டீபன் பிளமிங் இருந்து வந்தார். சமீபத்தில் சி.எஸ்.கே. அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இதனால் சி.எஸ்.கே. அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாகிர்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டீபன் பிளமிங் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நிமியக்கப்பட்டுள்ளார். பிளமிங் சி.எஸ்.கே.-யில் இருந்து விலகியும் சப்போர்ட் ஸ்டாஃப் (பந்து வீச்சு பயிற்சியாளர்) ஆன எரிக் சைமன்ஸும் அணியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக மோஹித் சர்மாவை சிஎஸ்கே நியமனம் செய்ய இருக்கிறது.
இந்த நிலையில்தான் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக எரிக் சைமன்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்டீபன் பிளமிங் தலைமையில் டாசன், மார்கஸ் டிரெஸ்கோதிக், ஜேம்ஸ் பாஸ்டர், எரிக் சைமன்ஸ் ஆகியோர் கோச்சிங் ஸ்டாஃப்களாக பணியாற்றுவார்கள்.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹசி உள்ளார். இவருக்குப் பதிலாக மாற்று பயிற்சியாளர் விரைவில் நியமிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.