INDvsNZ முதல் ஒருநாள் போட்டி: 7 விக்கெட்டை இழந்து நியூசிலாந்து தடுமாற்றம்

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.
New Zealand stumbles at 110/5: India's bowling dominates in the first ODI
Published on: 
Summary

நியூசிலாந்தில் இன்று நடைபெற்று வரும் முதல் ஒரு நாள் போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் டி20 தொடரை வென்று சாதனை படைத்தது.

இதையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.

நியூசிலாந்து ஆக்லாந்தில் உள்ள ஏடன் பார்க் மைதானத்தில் இன்று காலை 7:30 மணிக்கு முதல் ஒருநாள் போட்டி தொடங்கப்பட்டது.

அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்களான வில் யங், ஹென்ரி நிக்கோல்ஸ், டாம் லாதம் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நியூசிலாந்து அணி 30 ஓவர் ஆட்ட நேரமுடிவில் 7 விக்கெட்டை இழந்து 124 ரன்களில் தொடர்ந்து விளையாடி வருகிறது.

இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் குர்னூர் பிரார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

இந்திய அணி வீரர்கள்

சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நமன் திர், அன்ஷுல் கம்போஜ், அவ்கிப் நபி, குர்னூர் பிரார், அர்ஷ்தீப் சிங்

நியூசிலாந்து அணி வீரர்கள்

டிம் சீஃபர்ட், வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல்,

டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ்,

மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன்,

ஜேக்கப் டஃபி, பிளேர் டிக்னர்

X