147 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து வீரர்

இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை.
Ollie Pope
Published on

இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து அணிக்கு ஒல்லி போப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 103 ரன்களை அடித்த ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். இது 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை ஆகும்.

இலங்கை அணிக்கு எதிராக ஒல்லி போப் அடித்த சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த ஏழாவது சதம் ஆகும். இந்த ஏழு சதங்களையும் அவர் வெவ்வேறு அணிகளுக்கு எதிராகவே அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஏழு சதங்களை வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஒல்லி போப் படைத்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com