மனைவி என் பக்கம் இருந்தால்... சாக்ஷி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய #MSDhoni

தோனி பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி சாக்ஷி குறித்து தோனி நெகிழ்ந்து பேசியுள்ளார்.
மனைவி என் பக்கம் இருந்தால்... சாக்ஷி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய #MSDhoni
Published on

ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் முயற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வீரர்கள் முகாமில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி சாக்ஷி குறித்து தோனி நெகிழ்ந்து பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், "என்னால் இந்த முழு உலகோடும் சண்டையிட முடியும், ஆயிரம் மன அழுத்தங்களைக் கூட கையாள முடியும். ஆனால் அதற்கு என் மனைவி என் பக்கம் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com