20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்- டி காக்கை முந்திய டோனி

20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டோனி படைத்தார். 3-வது இடத்தில் இந்தியாவின் தினேஷ் கார்த்திக் உள்ளார்.
20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்- டி காக்கை முந்திய டோனி
Published on

சென்னை:

ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி ஒரு கேட்ச், ஒரு ஸ்டம்பிங், ஒரு ரன்-அவுட் செய்தார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். அவர் மொத்தம் 208 கேட்ச் பிடித்த தென் ஆப்பிரிக்காவின் டி.காக்கை (207) முந்தினார்.

3-வது இடத்தில் இந்தியாவின் தினேஷ் கார்த்திக் (205), 4-வது இடத்தில் பாகிஸ்தான் கம்ரன் அக்மல் (172), 5-வது இடத்தில் வெஸ்ட் இன்டீசின் ராம்தின் (150) உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com