'நன்னாரே' பாடலுக்கு டேன்ஸ் ஆடிய டோனி, கோலி, ரோகித்: ஏஐ வீடியோவை பகிர்ந்த ரிஷப் பண்ட்

எம்.எஸ்.டோனி, விராட் கோலி, ரோகித் நடனமாடுவது போன்ற ஏஐ வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார்.
'நன்னாரே' பாடலுக்கு டேன்ஸ் ஆடிய டோனி, கோலி, ரோகித்: ஏஐ வீடியோவை பகிர்ந்த ரிஷப் பண்ட்
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது.

ஆன்டிகுவாவில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஏ .ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடிய நன்னாரே பாடலுக்கு எம்.எஸ்.டோனி, விராட் கோலி, ரோகித் நடனமாடுவது போன்ற ஏஐ வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.

அந்த வீடியோவை ஸ்க்ரீன் ரெக்கார்டு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார்.

அதில், "அருமையான வெற்றி. என்னை மன்னித்து விடுங்கள் சகோதரர்களே. ஒரு அற்புதமான வீடியோவை நான் பதிவிட்டுள்ளேன். எனது முதல் ஸ்க்ரீன் ரெக்கார்டாக இதை உருவாக்கியவருக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com