கோலிக்கு தந்தையர் தின வாழ்த்து கூறிய மகள் வமிகா: புகைப்படம் பகிர்ந்த அனுஷ்கா

விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவைத் திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு வமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
கோலிக்கு தந்தையர் தின வாழ்த்து கூறிய மகள் வமிகா: புகைப்படம் பகிர்ந்த அனுஷ்கா
Published on

சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வீரர் விராட் கோலி. இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தங்களது ஆண் குழந்தைக்கு அகாய் என பெயரிட்டுள்ளனர்.

இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, தனது மகள் வமிகா செய்த தந்தையர் தின வாழ்த்து அட்டையை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் வமிகாவின் கால்தடம் வண்ணங்களால் பதிக்கப்பட்டுள்ளது.

அதில், "ஒருவரால் எப்படி இதனை விஷயங்களில் இவ்வளவு திறமையாக இருக்க முடியும்" என்று கோலியை அனுஷ்கா புகழ்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com