உங்களது மதிப்புமிக்க அறிவுரைக்கு நன்றி.. டோனி குறித்து முஸ்தஃபிசுர் உருக்கமான பதிவு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசுர் வங்கதேசம் திரும்பினார்.உங்களைப் போன்ற லெஜண்டுடன் சேர்ந்து விளையாடியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.
உங்களது மதிப்புமிக்க அறிவுரைக்கு நன்றி.. டோனி குறித்து முஸ்தஃபிசுர் உருக்கமான பதிவு
Published on

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் முதல் 4 இடங்கள் முறையே ராஜஸ்தான், கொல்கத்தா, லக்னோ, ஐதராபாத் ஆகிய அணிகள் உள்ளன. இந்த புள்ளிபட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றி 5 தோல்வியுடன் 5-வது இடத்தில் உள்ளது.

சென்னை அணிக்கு பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் பந்து வீச்சு கவலை அளிக்கும் விதமாக உள்ளது. முஸ்தஃபிசுர் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். இதனால் வெற்றி பெற போட்டியில் கூட சென்னை அணி தோல்வியை சந்தித்து வருகிறது.

சிஎஸ்கே அணிக்கு பந்து வீச்சுக்கு பக்க பலமாக இருந்த வங்காள தேச வீரர் முஸ்தஃபிசுர் ரகுமான் சிஎஸ்கே அணியில் இருந்து விடை பெற்றார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசுர் வங்கதேசம் திரும்பினார்.

இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் எல்லாவற்றுக்கும் நன்றி மஹி பாய். உங்களைப் போன்ற லெஜண்டுடன் சேர்ந்து விளையாடியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. உங்களது மதிப்புமிக்க அறிவுரைகளுக்கு நன்றி.

அவற்றை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். உங்களை மீண்டும் சந்திக்கவும், மீண்டும் உங்களுடன் சேர்ந்து விளையாடவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com