உடல் எடை குறித்து விமர்சனம்: ரோகித் சர்மாவுக்கு கவாஸ்கர், வெங்கடேஷ் பிரசாத் ஆதரவு

எடை குறைந்த வீரர்கள் மட்டும் வேண்டுமென்றால், அனைத்து மாடல்களையும்தான் தேர்வு செய்ய வேண்டும் என கவாஸ்கர் கூறினார்.ஒரு ஐசிசி போட்டியில் விளையாடி கொண்டிருக்கும், அவரை உடல் ரீதியாக அவமானப்படுத்துவது முற்றிலும் தேவையற்றது.
உடல் எடை குறித்து விமர்சனம்: ரோகித் சர்மாவுக்கு கவாஸ்கர், வெங்கடேஷ் பிரசாத் ஆதரவு
Published on

மும்பை:

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாக்டர் ஷமா முகமது தெரிவித்தார்.

ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன் என்று ஷமா முகமது கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் மற்றும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கவாஸ்கர் கூறும்போது, எடை குறைந்த வீரர்கள் மட்டும் வேண்டுமென்றால், நீங்கள் ஒரு மாடலிங் போட்டிக்குச் சென்று அனைத்து மாடல்களையும்தான் தேர்வு செய்ய வேண்டும்.

இதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். இது உடல் எடையை பொறுத்தது அல்ல. நீங்கள் எவ்வளவு சிறப்பாக கிரிக்கெட் விளையாட முடியும் என்பது பற்றியது. சர்பிராஸ்கான் உடல் எடை அதிகமாக இருப்பதால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக 150 ரன்கள் எடுத்தார். அதன்பின் அரைசதங்களும் அடித்தார்.

நான் விளையாடிய காலத்தில் என்னால் மைதானத்தை 2 முறை சுற்றி ஓட முடியாது. ஆனால் நான் நாள் முழுவதும் நின்று பேட்டிங் செய்தேன். உடல் எடைக்கும், மனவலிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கிரிக்கெட் உடற்பயிற்சி மற்றும் உடல் தகுதி இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் ஆகும். நீங்கள் நீண்ட தூரம் நீடிக்க முடியுமா என்பதுதான் மிக முக்கியமான விஷயம் என்றார்.

வெங்கடேஷ் பிரசாத் கூறும்போது, ஒரு கேப்டனாக ரோகித் சர்மா மிகுந்த கண்ணியத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். 8 மாதங்களுக்கு முன்பு 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றார்.

வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஒரு ஐசிசி போட்டியில் விளையாடி கொண்டிருக்கும், அவரை உடல் ரீதியாக அவமானப் படுத்துவது முற்றிலும் தேவையற்றது. பல ஆண்டுகளாக தனது திறமைகள் மற்றும் தலைமைத்துவத்தின் மூலம் சாதித்த ஒரு நபருக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com