டி20 உலக கோப்பையை 2வது முறையாக வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து- கே.எல்.ராகுல்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு கே.எல். ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பையை 2வது முறையாக வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து- கே.எல்.ராகுல்
Published on

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலை இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு கே.எல். ராகு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்

"போட்டி முழுவதும் இந்திய அணி புத்திசாலித்தனமாக இருந்தது. இந்த அணி தோற்கடிக்கப்படாத மற்றும் விரிவானது.

இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள், ரசிகர்கள் மற்றும் இந்தியர்கள் என ஒட்டு மொத்த தேசமும் உங்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடுகிறது" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com