ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பந்துவீச்சில் மீண்டும் முதலிடம் பிடித்தார் பும்ரா

டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சு தரவரிசையில் பும்ரா முதல் இடம் பிடித்தார். அவரை தொடர்ந்து அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பந்துவீச்சில் மீண்டும் முதலிடம் பிடித்தார் பும்ரா
Published on

துபாய்:

வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றி அசத்தியது.

இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் போட்டியில் 5 விக்கெட், 2-வது போட்டியில் 6 விக்கெட் என மொத்தம் 11 விக்கெட் சாய்த்தார்.

இந்நிலையில், டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் பும்ரா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அவரை தொடர்ந்து அஸ்வின் 2வது இடத்தில் நீடிக்கிறார். ஹேசில்வுட் 3வது இடத்திலும், கம்மின்ஸ் 4வது இடத்திலும் உள்ளார். ரபடா 5-வது இடத்தில் நீடிக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com