உலகக்கோப்பைகளை வென்ற கேப்டன்: எம்.எஸ்.டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிசிசிஐ

எம்.எஸ். டோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எம்ம்.எஸ். டோனிக்கு ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகக்கோப்பைகளை வென்ற கேப்டன்: எம்.எஸ்.டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிசிசிஐ
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி எம்.எஸ். டோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்த கொண்டாட்டத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டு எம்.எஸ். டோனிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எம்ம்.எஸ். டோனிக்கு ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலத்தரப்பினரும் எம்.எஸ். டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எம்.எஸ். டோனியின் பிறந்தநாளை ஒட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் சிறப்பு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை எம்.எஸ்.டோனி பிடித்திருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பிறந்த நாள் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com