வெளிநாட்டு தொடர்களில் மோசம்: விளக்கம் கேட்க கம்பீர், அகர்கர், லக்ஷ்மண் பிசிசிஐ-க்கு சம்மன்

அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி அடைந்தது இந்திய டி20 அணி.
BCCI
பிசிசிஐ
Published on

இந்திய டி20 அணி சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சென்று விளையாடியது. அயர்லாந்துக்கு எதிரான தொடரை 0-2 என இந்தியா இழந்தது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளில் கொண்ட தொடரில் 0-4 என இந்தியா தோல்வியடைந்தது.

பிசிசிஐ ஆய்வு

பின்னர், சில வீரர்கள் காயம் காரணமாக கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் அணியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக பி.சி.சி.ஐ. கவுதம் கம்பீர், தேர்வுக்குழு கமிட்டி தலைவர் அஜித் அகர்கர், பெங்களூருவில் உள்ள COE தலைவர் லக்ஷ்மண் ஆகியோருக்கு பிசிசிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

இவர்கள் அனைவரும் மும்பை தலைமையத்திற்கு வர உள்ளனர். இவர்கள் எதிர்கால இந்திய அணியின் பயணம் குறித்து விவாதம் நடத்த இருக்கிறது.

பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, ஏற்கனவே அயர்லாந்து, இங்கிலாந்து தொடரில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து ஆய்வு செய்யப்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

16 தொடர் வெற்றிக்குப் பிறகு தோல்வி

இந்தியா 16 தொடர்களில் இழக்காமல் வீறுநடை போட்டி சென்று கொண்டிருந்தது. ஷ்ரேயாஸ் தலைமையில் முதன்முறையாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சென்ற டி20 அணி தொடர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com