பெண்கள் ஆசிய கோப்பை அரையிறுதி: டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு- இந்தியா முதலில் பேட்டிங்

மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன.
kaur
Published on
Summary

பெண்கள் ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதியில் டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

துபாயில் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. கடந்த 28-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா அணிகளும் இடம்பெற்றன.

லீக் சுற்றுகளின் முடிவில் ஏ, பி பிரிவுகளில் முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

அதன்படி, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதி

இந்நிலையில், துபாயில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் வங்கதேச அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பவுலிங் தேர்வு செய்தது.

இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com