பேட்ஸ்மேன்கள் அதிரடி.. ஆஸ்திரேலியாவுக்கு 307 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்

வங்காளதேசம் சார்பில் தௌஹித் ரிடோய் 74 ரன்களை குவித்தார். ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பேட்ஸ்மேன்கள் அதிரடி.. ஆஸ்திரேலியாவுக்கு 307 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்
Published on

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டி பூனேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி களமிங்கிய வங்காளதேசம் அணி துவக்கம் முதலே நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் முறையே 36 ரன்களை குவித்தனர். அடுத்து வந்த கேப்டன் நஜுமுல் 45 ரன்களையும், தௌஹித் ரிடோய் 74 ரன்களையும் குவித்தனர்.

இவருடன் ஆடிய மஹமதுல்லா 32 ரன்களையும், முஷ்ஃபிகுர் ரஹிம் மற்றும் மெஹிடி முறையே 21 மற்றும் 29 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை குவித்தது.

ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஜாம்பா மற்றும் சீன் அபாட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com