

டெல்லி அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் படேலை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகத்திடம் சி.எஸ்.கே. பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியது.
2027 ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் 16-ம் தேதி கோவாவில் நடைபெறு கிறது. இதற்கான வீரர்கள் தக்கவைப்பு விவரங்களை வரும் 17-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என 10 அணிகளுக்கும் ஐ.பி.எல். நிர்வாகம் காலக்கெடு விதித்துள்ளது.
இதையடுத்து, வீரர்களுக்கான பரிமாற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஒவ்வொரு அணியும் ஈடுபட்டு வருகின்றன.
ஐந்து முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் சமீபத்தில் கலீல் அகமது, நாதன் எல்லீஸ் ஆகியோரை ஐதராபாத் அணிக்கு பரிமாற்றம் செய்தது. அதற்கு பதிலாக அங்கிருந்து லிவிங்ஸ்டன், எட்வர்ட்ஸ் ஆகியோரை சி.எஸ்.கே. ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில், டெல்லி அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் படேலை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகத்திடம் சி.எஸ்.கே. பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்சர் படேலுக்கு பதிலாக டெல்லி கேப்பிடல்ஸ் சென்னை அணியில் எந்த வீரரை விரும்புகிறது என்பது தெளிவாக தெரியவில்லை.
பிரேவிஸ் அல்லது நூர் அகமது போன்ற வீரர்களை விரும்பலாம் என் கூறப்படுகிறது. 7-வது வரிசைக்கு அக்சர் படேல் பொருத்தமானவர் என சி.எஸ்.கே. இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
டெல்லி அணி ஏற்கனவே ரிஷப் பண்டுக்காக குல்தீப் யாதவை வீட்டுக் கொடுத்ததால் சுழற்பந்து வீரர் அந்த அணிக்கு தேவை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நூர் அகமதுவை அக்சர் படே லுக்கு பதிலாக பரிமாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நூர் அகமதுவை 2025 மெகா ஏலத்தில் ரூ.10 கோடி எடுத்து சி.எஸ்.கே. எடுத்தது. இதற்கிடையே நூர் அகமதுவை கைவிடுவது சென்னை அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இந்திய வீரர் விகாரி எச்சரிக்கை விடுத்தார்.
வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் டெல்லி அணி ஏற்கனவே டி.நடராஜனை ஐதராபாத்துக்கு விடுவித்து, அங்கிருந்து ஜீஷன் அன்சாரியை பெற்றுள்ளது.