மஹாகாளேஷ்வர் கோவிலில் சாமி தரிசனம் செய்த விராட் கோலி - அனுஷ்கா சர்மா: வைரலாகும் வீடியோ

மஹாகாலேஷ்வர் கோவிலில் நல்ல தரிசனம் செய்தோம் என்று அனுஷ்கா ஷர்மா கூறினார்.இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் தங்கள் மகள் வாமிகாவுடன் ரிஷிகேஷ் மற்றும் விருந்தாவனத்திற்கும் சென்றிருந்தனர்.
மஹாகாளேஷ்வர் கோவிலில் சாமி தரிசனம் செய்த விராட் கோலி - அனுஷ்கா சர்மா: வைரலாகும் வீடியோ
Published on

ஆஸ்திரேலிய அணிவுடனான 4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மஹாகாளேஷ்வர் கோயிலுக்குச் சென்றனர்.

இருவரும் மற்ற பக்தர்களுடன் கோவிலுக்குள் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தூரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த ஒரு நாள் கழித்து இன்று அவர்கள் கோயிலுக்கு சென்றுள்ளனர்.

நாங்கள் பிரார்த்தனை செய்ய இங்கு வந்தோம். மஹாகாலேஷ்வர் கோவிலில் நல்ல தரிசனம் செய்தோம் என்று அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.


இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் தங்கள் மகள் வாமிகாவுடன் ரிஷிகேஷ் மற்றும் விருந்தாவனத்திற்கும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 9-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com