

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
டெல்லியில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக யாஷ் தாக்குர் அணியில் இணைந்துள்ளார். சூர்யவன்ஷி இந்தப் போட்டியிலும் சேர்க்கப்படவில்லை.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.
அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, அக்ஷர் பட்டேல், நிதிஷ்குமார் ரெட்டி, ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தாக்குர்.
ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), செடியுல்லா அடல், டார்விஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, ரஷித் கான், முஜுப் உர் ரஹ்மான், பசல்ஹக் பரூக்கி, அப்துல்லா அஹமதுசாய், நுர் உல் ரஹ்மான்.