3வது டி20 போட்டி: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் அதிரடியில் இந்தியா 221 ரன்கள் குவிப்பு

அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 30 பந்தில் சதமடித்து அசத்தினார்.
abhishek, samson
Published on
Summary

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் அதிரடியால் இந்திய அணி 221 ரன்களைக் குவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

டெல்லியில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியில் இறங்கினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

இந்திய அணி பவர் பிளே ஓவரில் 100 ரன்களைக் குவித்தது.

30 பந்தில் சதமடித்த அபிஷேக்

அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 30 பந்தில் சதமடித்து அசத்தினார். இதில் 10 சிக்சர், 9 பவுண்டரி அடங்கும்.

முதல் விக்கெட்டுக்கு 142 ரன்களை சேர்த்த நிலையில், அபிஷேக் சர்மா 34 பந்தில் 108 ரன்கள் குவித்து ஆட்டமிந்தார்.

அடுத்து இறங்கிய திலக் வர்மா 2 ரன்னில் வெளியேறினார்.

தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். ஷ்ரேயஸ் அய்யர் 29 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 221 ரன்களைக் குவித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com