முத்தரப்பு தொடர்: 161 ரன்கள் எடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா ஆப்கானிஸ்தான்?

வங்கதேசத்தின் பர்வேஸ் ஹொசைன் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து, 70 ரன்னில் ஆட்டமிழந்தார்.
bangladesh
Published on: 
Summary

முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வங்கதேசம்.

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

முதல் லீக்கில் ஜிம்பாப்வே, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜிம்பாப்வே அணி 99 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.

இந்நிலையில், 3வது லீக் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

வங்கதேசம் திணறல்

அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேசம் விரைவில் விக்கெட்களை இழந்தது. 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

5வது விக்கெட்டுக்கு சயீப் ஹாசன் - பர்வேஸ் ஹொசைன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 93 ரன்கள் சேர்த்த நிலையில் சயீப் ஹாசன் 41 ரன்னில் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பர்வேஸ் ஹொசைன் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 70 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், வங்கதேசம் 41.2 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ரஷித் கான் 4 விக்கெட்

ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 4 விக்கெட்டும், அஸ்மதுல்லா ஒமர்சாய், யாமின் அஹமத்சாய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com