சக வீரருக்கு முத்தமிட்ட ஆஸ்திரேலிய வீரர்- காதலர் தினத்தில் வைரலாகும் புகைப்படம்

ஸ்டோய்னிஸ் கன்னத்தில் ஜாம்பா முத்தமிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.ஜாம்பா மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் பிக் பாஷ் 2022-23 இல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினர்.
சக வீரருக்கு முத்தமிட்ட ஆஸ்திரேலிய வீரர்- காதலர் தினத்தில் வைரலாகும் புகைப்படம்
Published on

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் அன்புக்குரியவர்களைக் கெளரவிப்பதற்கும் அவர்களை சிறப்புற உணர வைப்பதற்கும் ஒரு நாள். பலர் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்களில் ஒருவருக்கு ஒருவர் காதலர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜாம்பா ஸ்டோய்னிஸின் கன்னங்களில் முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பிக் பாஷ் லீக்கின் ட்விட்டர் பக்கம், "காதலர் தின வாழ்த்துகள்" என்று ஒரு அன்பான ஈமோஜியுடன் தலைப்பிட்டுள்ளது. 

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜாம்பா மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் பிக் பாஷ் 2022-23 இல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com