ஆசிய பாராலிம்பிக்: ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி தங்கம் வென்று சாதனை

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஐந்தாவது தங்கப் பதக்கமாக அமைந்துள்ளது.
தீப்தி ஜீவன்ஜி
Published on: 
Summary

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் டி20 ஓட்டப்பந்தயத்தில் தீப்தி ஜீவன்ஜி தங்கப் பதக்கம் வென்றார்.

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் நேற்று முன் தினம் தொடங்கின. வரும் 24ஆம் தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மகளிர் 400 மீட்டர் டி20 ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி தங்கப் பதக்கம் வென்றார்.

தெலங்கானாவைச் சேர்ந்த 23 வயதான தீப்தி, 56.36 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய விளையாட்டு சாதனையை படைத்தார்.

58.92 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து ஜப்பானின் நீனா கண்ணோ வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜப்பானின் மற்றொரு வீராங்கனை அகானே கட்டோ, 1 நிமிடம் 0.26 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

தீப்தி சாதனை பட்டியல்

தீப்தி 2024 பாரா உலக சாம்பியன்ஷிப்பில் இதே பிரிவில் தங்கப் பதக்கமும், அதே பிரிவில் பாராலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.

தீப்தியின் இந்த வெற்றி இந்தியாவுக்கு 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஐந்தாவது தங்கப் பதக்கமாக அமைந்துள்ளது.

டி20 பிரிவு என்பது அறிவுசார் குறைபாடுகள் உள்ள விளையாட்டு வீரர்களுக்கானதாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com