

ஜப்பானின் அயிச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், ஈட்டி எறிதலில் ஆண்களுக்கான எஃப்46 பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவின் ரிங்கு ஹூடா 65.11 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
மற்றொரு இந்திய வீரரான அஜித் சிங் 65.02 மீட்டர் தூரம் எறிந்து, வெறும் 9 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மூன்று பேர் கொண்ட களத்தில், மற்றொரு போட்டியாளரான இந்தோனேசியாவின் ஆர். சக்தியோனோ, 55.30 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம் ஆசிய பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தமாக 6 பதக்கங்கள் வென்றுள்ளது.
F46 வகைப்பாடு என்பது, முழங்கைக்கு மேலேயோ அல்லது கீழேயோ ஏதேனும் ஒரு கை நீக்கம் செய்யப்பட்ட அல்லது அதற்கு இணையான குறைபாடு உள்ள விளையாட்டு வீரர்களுக்கானது.