

ஆசிய விளையாட்டு ஜப்பானில் நடைபெற்று வந்தது. நேற்றுடன் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று நிறைவு விழா நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் சீனா 341 பதக்கங்களை குவித்துள்ளது. இதில் 169 தங்கம் அடங்கும். அத்துடன் 89 வெள்ளி, 83 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளது.
போட்டியை நடத்தும் ஜப்பான் 83 தங்கத்துடன் 269 பதக்கங்கள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. 95 வெள்ளி, 91 வெண்கல பதக்கங்களும் வென்றது.
தென்கொரியா 39 தங்கம், 43 வெள்ளி, 68 வெண்கலம் என 150 பதக்கங்கள் வென்று 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என 85 பதக்கங்கள் வென்று 4-வது இடத்தை பிடித்துள்ளது.
உஸ்பெகிஸ்தான் 70 பதக்கங்களுடன் 5-வது இடத்தையும், ஈரான் 52 (19 தங்கம்) பதக்கங்களுடன் 6-வது இடத்தையும், தாய்லாந்து 52 (18 பதக்கம்) பதக்கங்களுடன் 7-வது இடத்தையும் பிடித்துள்ளன.
கஜகஸ்தான் 84 பதக்கங்கள் பெற்றிருந்தாலும் 12 தங்கம் மட்டுமே வென்றதால் 8-வது இடத்தை பிடித்துள்ளது. ஹாங்காங் (54), பஹ்ரைன் (22) தலா 11 தங்கப் பதக்கம் வென்று 9-வது மற்றும் 10-வது இடங்களை பிடித்துள்ளன.