ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா- ஜப்பான் இன்று மோதல்

இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை பந்தாடி 7-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
IND vs JPN
Published on: 

6 அணிகள் இடையிலான 9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த அரைஇறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை பந்தாடி 7-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஷிலானந்த் லக்ரா, தில்பிரீத்சிங் தலா 2 கோலும், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், சுக்ஜீத் சிங், அன்கத் பிர் சிங், விவேக் சாகர் பிரசாத் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

ஜப்பான்- மலேசியா இடையிலான மற்றொரு அரை இறுதி ஆட்டம் வழக்கமான நேரத்தில் கோலின்றி சமனில் முடிந்தது. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் ஜப்பான் 5-0 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டியது.

இந்நிலையில், இன்றிரவு (வியாழக்கிழமை) 7 மணிக்கு நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா- ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

X