பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் அஷ்மிதா சலிஹா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
ashmita chaliha
Published on: 
Summary

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹா, ஜப்பானின் நஜோமி ஒகுஹரா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஜப்பான் வீராங்கனை 21-10 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட அஷ்மிதா சலிஹா 2வது செட்டை 21-17 என கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஜப்பான் வீராங்கனை 21-16 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com