

அபிஷேக் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தை நியூசிலாந்து வீரர் டேரில் மிச்சேல் பாராட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அபிஷேக் சர்மாவின் இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானது. அவரது சில ஷாட்டுகள் உலக தரத்தில் இருந்தன. அதன் காரணமாகவே அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார்.
இந்த போட்டியில் அவர் மிகவும் நன்றாக ஆடினார். அவரது இந்த இன்னிங்சை யாரும் மறக்க மாட்டார்கள்.
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை நாங்கள் இழந்து விட்டோம். இன்னும் 2 போட்டிகள் உள்ளன. அதில் சிறப்பாக ஆடி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எப்போதுமே சிறப்பானது. இந்தியாவுக்கு எதிரான அடுத்தப் போட்டிக்கான சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
இவ்வாறு மிச்சேல் கூறியுள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவர் 52 பந்தில் 89 ரன் (5 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். ஆனால் இது பலன் இல்லாமல் போனது.