

புதிய முயற்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய வாரம். ராசிக்கு சனியின் பார்வை உள்ளது. தொழில் மந்த நிலை மாறி சூடு பிடிக்கும். எதிர்பாராத புதிய திருப்பங்கள் உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பங்குச் சந்தை, அதிர்ஷ்டப் பணம் என உபரி வருமானம் கிடைக்கும். பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும். கடன் சுமை குறையும். காதல் திருமண முயற்சி வெற்றி தரும். சிலருக்கு வாழ்க்கைத் துணையால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சிலர் உடன் பிறப்புகளுக்காக சொத்தை விட்டுக் கொடுப்பார்கள். சுய விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். எதிர் பாலினத்தவரிடம் கவனமாக பழகவும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் இருக்கும். இனம் புரியாத நோயின் தாக்கம் சிகிச்சையில் சீராகும். திருமண வாய்ப்பு உடனே தேடி வரும் குழந்தை பாக்கியம் உண்டாகும். மகாளய பட்ச காலத்தில் பெற்றோர்கள் பெரியோர்களின் நல்லாசிகளை பெறவும்.
புது வசந்தம் பிறக்கும் வாரம். ராசிக்கு குரு மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளது.குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் சீராகும். வீண் விரயங்கள் குறையும்.அதிக முதலீடு செய்ய வேண்டிய புதிய தொழில் ஒப்பந்தங்களில் கவனம் தேவை. அரசு வேலையில் இருப்ப வர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். சிலருக்கு மறு திருமணம் நடக்கும். கூட்டுத் தொழில் புரிபவர்களிடம் சிறு மன பேதம் ஏற்படலாம்.ஜாமீன் பிரச்சினை, கடன் பிரச்சினை, நோய் தாக்கம், எதிரி தொல்லை, செய்வினைத் தாக்கம், பய உணர்வு போன்ற பாதிப்புகள் அகலும் நிரந்தரமில்லாத உத்தியோகம், அடிக்கடி வேலையை மாற்றுவது, தாய் மாமன், உடன் பிறப்புகளால் மன வேதனை, முறையற்ற பாகப்பிரிவினை போன்ற பிரச்சினைகள் விலகும். புண்ணிய சேத்தி ரங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். மகாளய பட்ச காலத்தில் கூலித் தொழி லாளிகளின் தேவையறிந்து உதவவும்.
புத்தியை தீட்ட வேண்டிய வாரம். ராசியில் உள்ள ராகுவிற்கு செவ்வாயின் எட்டாம் பார்வை உள்ளது. பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. சிலர் குடும்ப உறவுகளுக்காக கடன் பட நேரும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தொழில் வியாபார ரகசியங்கள் கசியும். பங்குதாரர்கள், நண்பர்களிடம் சிறு மன பேதம் ஏற்படும். எந்தச் செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். அலைச்சல் மிகுதியாகும். வேலைப் பளு அதிகமாகும். பங்குச் சந்தை முதலீடுகள் நிலை தடுமாற வைக்கும். அரசு அங்கீகாரமற்ற வங்களில் முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு அல்லது பொருள் விரயம் ஏற்படும். காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தை பேணுவது அவசியம். மகாளய பட்ச காலத்தில் துப்புரவு தொழிலாளர்களின் தேவை அறிந்து உதவவும்.
நெருக்கடி நிலை மாறும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பஞ்சங்கள் விலகும். யாரும் செய்யத் தயங்கும் செயல்களை துணிச்சலுடன் செய்து முடிக்கும் வல்லமை உண்டாகும். திருமணம் முடிந்து இதுவரை கருத்தரிக்காத பெண்களுக்கு பாக்கிய பலத்தால் கரு உருவாகும். கருத்தரிப்பில் சிரமம் உள்ளவர்களுக்கு வைத்தியம் பலன் தரும். பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், முன்னேற்றம் வெகு சிறப்பாக இருக்கும். கவுரவப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை நிம்மதி ஏற்படும். வங்கி கடன் மூலம் புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும். சிலர் குடியிருப்பை மாற்றம் செய்யலாம். பூர்வீகம் தொடர்பான பிரச்சினைகள் குறையும். குல தெய்வ, இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம். ஆடம்பரத்தை, அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள அதிக செலவு செய்ய நேரும். மகாளய பட்ச காலத்தில் அந்தணர்களின் தேவை அறிந்து உதவவும்.