2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

பங்குச் சந்தையில் முதலீடு செய்வீர்கள்.
rasipalan
Published on

தனுசு

எண்ணியது ஈடேறும் வாரம். பாக்கிய ஸ்தான அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெறுகிறார். வாழ்க்கையை நடத்துவதில் நிலவிய சங்கடங்கள் அகலும். உங்களின் முயற்சிகள் வெற்றி வாய்ப்பை அள்ளித் தரும். இதுவரை வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் வெகுவாக குறையும். மந்தமாக இருக்கும் தொழில் மளமளவென வளரும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வீர்கள். இழுபறியில் இருந்து வந்த நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் வருமானம் பல மடங்கு உயரும். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசியுடன் திருமணம் நடக்கும். வேலை செய்யும் இடத்திலும் மதிப்பு, மரியாதை உயரும்.7.9.2026 அன்று பகல் 12.38 முதல் 9.9.2026 அன்று பகல் 3.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். அஷ்டம குருவின் தாக்கம் இருப்பதால் தேவையற்ற அலைச்சலும் மன உளைச்சலும் வரலாம். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் மன உளைச்சல் இருக்காது. வியாழக்கிழமை மாலை லட்சுமி குபேரர் வழிபாடு செய்வதால் செல்வ வளம் கூடும்.

மகரம்

திருமணம் முயற்சிகள் வெற்றி தரும் வாரம். ராசிக்கு குரு மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளதால் தடைப்பட்ட தொழில் வளரும். கடன் கொடுக்க நிதி நிறுவனங்கள் வீடு தேடி வரும். திருமண வாய்ப்புகள் கூடிவரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அனைத்து பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் நிறைவேறும். பெண்களுக்கு தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சொத்துக்கள் வாங்கும் மற்றும் விற்கும் விஷயத்தில் கவனம் தேவை. பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் அவசரப்படக்கூடாது. சிலருக்கு அவ்வப்போது ஞாபக சக்தி குறையும். கண் காது மூக்கு தொடர்பான பாதிப்புகள் வரலாம். மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்றால் ஆனந்தமான வாழ்க்கை அமையும். 9.9.2026 அன்று பகல் 3.14 முதல் 11.9.2026 இரவு 7.08 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு உறவினர்களால் கண் திருஷ்டி ஏற்படும். குடும்ப உறவுகளை குறிப்பாக உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வதால் கவலைகள் குறையும். பிரதோஷ காலங்களில் விரதம் இருந்து நந்தியையும் சிவபெருமானையும் வழிபட விருப்பங்கள் நிறைவேறும்.

கும்பம்

எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும் வாரம். 5,8ம் அதிபதியான புதன் உச்சம் பெறுவதால் சுப பலன்கள் கூடிவரும். திருமணம் குழந்தை பிராப்தம் போன்றவற்றில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். குல தெய்வ அருள் கடாட்சம் கிடைக்கும். ஆன்மீக பயணங்கள் அதிகமாக மேற்கொள்வீர்கள். அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு வேலை மாற்றம் செய்யக் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு பல மடங்கு நன்மையான பலன்கள் நடக்கும். வருமானம் உயரும். விண்ணப்பித்த வீடு வாகன கடன் கிடைக்கும். நிரந்தரமற்ற வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரமாகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. செலவு குறையும் சேமிப்பு உயரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தென்படும். சில மறைமுக எதிர்ப்புகள், போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் வெற்றி உறுதி. 11.9.2026 இரவு 7.08 க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் ஞாபக சக்தி குறைவு உண்டாகும் உறவுகளுக்காக சூழ்நிலைக் கைதியாக வாழும் நிலை இருக்கும். பிரதோஷத்தன்று விரதம் இருந்து உணவு தானம் வழங்குவதால் வாழ்க்கையில் எந்தவித தடங்கலும் வராது.

மீனம்

நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் வாரம். ராசியில் வக்ரகதியில் நிற்கும் சனி பகவானுக்கு குருவின் ஒன்பதாம் பார்வை இருப்பதால் இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த திறமைகள் வெளிப்படும். புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். வீடு, வாகன யோகம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். மனம் மகிழும் சம்பவம் நடைபெறும். முதியவர்களுக்கு அரசின் உதவித்தொகை, பென்சன் கிடைக்கும். லாட்டரி, பங்குச் சந்தை, உயில் சொத்து, பாலிசி முதிர்வு தொகை மூலம் பெரும் பணம் கிடைக்கும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெறுவதால் புத்திர பிராப்தம் உண்டாகும். அதிர்ஷ்டம் சார்ந்த ஆதாயம் உண்டாகும். கடந்த கால கடன்கள், பிரச்சனைகள் எல்லாம் நிவர்த்தியாகும். உயர்கல்வி முயற்சி சாதகமாகும். வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத விரயங்களும் ஏற்படும். சிலருக்கு அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும். ஜென்மச் சனி உள்ளதால் எதையும் பல முறை சிந்தித்து செயல்படுத்த வேண்டும். அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com