

உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டாகும் வாரம். ராசிக்கு சனி மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளது. திறமைகளை வெளிக்காட்டி சிறப்படைய முடியும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கும். ஐந்து பத்துக்கு அல்லாடிய நிலை மாறும். தான தர்மம் செய்யக்கூடிய வகையில் வருமானம் உயரும். ஏலச்சீட்டு நகை சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும். விட்டு விலகிச் சென்ற சொந்தங்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். சில நேரங்களில் அவை நன்மையாகவும் பல நேரங்களில் தீமையாகவும் முடிந்து விடும். சகோதர சகோதரிகளுக்காக பாடுபட்டு உழைப்பீர்கள். தந்தை வழியிலுள்ள பிரச்சனைகள் அகலும். பூர்வீகச் சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் மத்தியஸ்தர்கள் முன்பேசி சுமூகமாக தீர்க்கப்படும். மாணவர்களுக்கு உயர் கல்விக்கு விரும்பிய கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். பருவப் பெண்களின் மனதிற்கு பிடித்த மணாளனே மாலையிடுவார். கலைத்துறையினர் வளமான எதிர்காலம் அமைத்துக் கொள்ள சாதகமான நேரம். பவுர்ணமி அன்று சித்தர்களை ஜீவசமாதிகள் வழிபடவும்.
கடின உழைப்பால் சாதிக்கும் வாரம். ராசிக்கு குரு மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளது. சொத்துக்களை வாங்குவதில் விற்பதில் நிலவிய தடைகள் தாமதங்கள் அகலும். மனப் போராட்டங்கள் தீரும். தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இறை சக்தியை உணர்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தொழில் உத்தியோகத்தில் சிந்தித்து செயல்படும் போது பெரிய பாதிப்புகள் வராது. நண்பர்களின் உதவி கிடைக்கும். அள்ள அள்ள குறையாத பொருள் சேரும். செய்தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசுத்துறையால் ஆதாயம் உண்டு. அலைச்சலும், அசதியுமான உள்ளுர், வெளியூர், வெளிநாட்டு தொழில் பயணங்கள் உண்டாகும். ஊர் மாற்றம்,வேலை மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது. படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்கும். குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகள் சில பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவிக்கும். பவுர்ணமி அன்று விரதம் இருந்து காவல் தெய்வங்களை வழிபடவும்.
புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசிக்கு ஏழில் சூரியன், புதன், கேது சேர்க்கை ஏற்பட்டு கிரகணம் ஏற்பட உள்ளது. அறியாமல் வாங்கிய வில்லங்க சொத்திற்கு உரிய பட்டா மற்றும் முறையான ஆவணங்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியத்தில் ஏற்பட்ட காலதாமதம் அகலும். தடைபட்ட வாடகை வருமானம் கிடைக்கும். பல நாட்களாக நோய்க்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவார்கள். பிள்ளைகளால் ஆதாயமுண்டு. புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலை தேடி அலுத்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திடீர் மாற்றத்தால் மனம் ஆனந்தமடையும். கடந்த காலப் பிரச்சினைகளை மறந்து கணவன், மனைவி அன்புடன் இல்லறம் நடத்துவார்கள். கன்னிப் பெண்களுக்கு அழகும், கம்பீரமும் நிறைந்த வாழ்க்கைத் துணை கிட்டும். மாணவ, மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் நீங்கள் விரும்பும் மதிப்பெண்ணை பெற முடியும். பவுர்ணமி அன்று விரதம் இருந்து துர்க்கை அம்மனை வழிபடவும்.
காரிய சித்தி உண்டாகும் வாரம். மீன ராசிக்கு 2,9ம் அதிபதியான செவ்வாய் 4ம்மிடமான கேந்திரம் ஏறி நிற்பது மிகச் சிறப்பான அமைப்பாகும். நிதானம் மற்றும் நேர்மறை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். கடன் தொல்லை குறையும். அடமான சொத்துக்கள் நகைகளை மீட்க கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொருளாதார நிலை திருப்தியாக இருக்கும். பூர்வீகம் குலதெய்வம் குழந்தை சார்ந்த செயல்களால் ஆதாயம் ஏற்படும். பங்குச்சந்தை, பந்தய வெற்றி, எதிர்பாராத தொழில் லாபம் போன்றவற்றால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் வருவதற்கு புதிய முயற்சிகளை, யுக்திகளை கடைபிடிப்பீர்கள். எதிரிகளை அடக்க முடியும் என்பதால் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். தாயின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். பவுர்ணமி அன்று விரதம் இருந்து திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.