

தடைபட்ட இன்பங்கள் தேடி வரும் வாரம். தற்போது கோச்சாரத்தில் ராசிக்கு 12-ம் மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் நின்று ஏழரைச் சனியின் தாக்கத்தை வழங்கிய சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சனிபகவானின் தாக்குதல் முழுமையாக குறையும். இந்த வாரம் சனி பகவான் மிக மிகச் சாதகமாக உள்ளார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்ற கூற்று உங்களுக்கு மிகவும் பொருந்தும். இந்த ஜென்மத்தில் நீங்கள் அடைய வேண்டிய அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களையும் வாரி வழங்கப்போகிறார். அதை பெற்றுக் கொள்ள தசா புத்தி மட்டும் சாதகமாக இருக்க வேண்டும்.கவுரவப் பதவி, கவுரவப் பட்டம் கிடைக்கும்.பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகமாகும். புதிய ரத்த அணுக்கல் உற்பத்தியாகி நோய் எதிர்ப்பு சக்தி கூடும். 19.8.2026 அன்று நள்ளிரவு 2.30 முதல் 22.8.2026 அன்று பகல் 2.49 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.கருட பஞ்சமி அன்று விரதம் இருந்து சர்ப்ப வழிபாடு செய்யவும்.
திட்டம் தீட்டி வெற்றி பெற வேண்டிய வாரம். ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்திற்கு சூரியன் மற்றும் குருவின் பார்வை உள்ளது. தெய்வ அனுகூலம் தற்போது கிடைக்கப் பெறுவதால் சுய ஜாதக ரீதியான அனைத்து விதமான தோஷங்களும் சாபங்களும் விலகும். தடைபட்ட அனைத்து இன்பங்களும் மீண்டும் வந்து சேரும். கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் ஓடி வந்து நிற்கும். இனம் புரியாத நோய் தாக்கம், மனசஞ்சலம் பயம் அகலும்.புதியதாக பிறப்பெடுத்தது போன்ற உணர்வு மேலோங்கும். தற்போது சுமார் 135 நாட்கள் சனிபகவான் வக்கிர கதியில் சஞ்சரிக்கப் போவதால் ராசியில் பதிந்த சனி பகவான் தாக்கம் வெகுவாக குறையும்.தடைபட்ட தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலமாக இருக்கும். குடும்ப விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.தொழிலில் வருமானம், லாபம் அதிகமாக இருப்பதால் உழைக்கும் ஆர்வம் அரிகரிக்கும். தொழில் மாற்ற சிந்தனை ஏற்படும். இழுபறியாக இருந்த முயற்சிகள் இப்பொழுது பலிதமாகும்.திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். நாக சதுர்த்தியன்று சர்ப்ப வழிபாடு செய்யவும்.
வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சிகள் அகலும்.ராசியில் 6,11-ம் அதிபதி செவ்வாய் சஞ்சரிக்கிறார்.எண்ணங்கள் விருப்பங்கள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறக்கூடிய சாத்திய கூறுகள் உள்ளது.சிலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாழ்வார்கள்.சிலர் பழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்குவீர்கள். இழுபறியாக இருந்து வந்த குடும்ப சொத்து விவகாரம் சட்டத்தின் உதவியை நாட வைக்கும். புத்திர தோஷத்தினால் நீண்ட காலமாக தடைபட்ட புத்திர பாக்கியம் கைகூடும்.குறைந்த முதலீட்டில் எளிய உழைப்பில் நல்ல வருமானம் வரக்கூடி நிலையான வருமானத்திற்கான புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வழக்கறிஞர், அரசியல் வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, ஊடகங்கள், போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பலன்கள் இரட்டிப்பாகும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும்.தாய், தந்தையின் அன்பும் ஆசிர்வாதமும் உங்களை நல்ல முறையில் வழி நடத்தும். கருட பஞ்சமி அன்று குங்கும அபிஷேகம் செய்து சர்ப்ப வழிபாடு செய்யவும்.
மனதில் தன்னம்பிக்கை கூடும் வாரம். ராசியில் சூரியன் குரு சேர்க்கை உள்ளது. இது சிவராஜ யோக அமைப்பாகும். இந்த கிரகச் சேர்க்கை மீண்டும் ராசியில் உருவாக 12 ஆண்டுகள் ஆகும்.உடலும், மனமும் பொலிவு பெறும். இடமாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் என அவரவரின் வயதிற்கும், தேவைக்கும் ஏற்ற மாற்றம் உண்டாகும்.கையிருப்பு கணிசமாக உயரும். எப்படி பணம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பணவரவு இருக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரிப்பால் கெளரவம் அந்தஸ்து அதிகரிக்கும். உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்க வேண்டும் என்று ஆசை உண்டாகும். வங்கிகள், நிதி நிறுவனங்களின் உதவியுடன் வீடு, மனை, நிலம் வாங்குதல் சுலபமாக நடைபெறும். என்றோ வாங்கிய பங்குகள் இப்பொழுது நல்ல லாபத்தை பெற்றுத்தரும்.திருமண முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நாகபஞ்சமி அன்று விரதம் இருந்து புனித நீர்களால் சர்ப்ப சிலைகளுக்கு அபிஷேகம் செய்யவும்.