

தொழில் மாற்றங்கள் உண்டாகும் வாரம். மேஷ ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தை ராகுவும், நான்காமிடமான சுக ஸ்தானத்தை கேதுவும் நெருங்குகிறார்கள். சமுதாய அந்தஸ்து உயரும். புதிய தொழில் துவங்கும் ஆர்வம் உதயமாகும். தீர்மானங்களை எண்ணங்களை செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். இதுவரை நீங்கள் அனுபவித்த பிரச்சினைகள், சங்கடங்கள், கஷ்டங்கள், குறைந்து, உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் ஏற்படும். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். சாதிக்க துடித்த விசயங்களை சாதிக்கும் துணிவும், சந்தர்ப்பமும் உருவாகும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. வெற்றியை நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை. வெற்றி உங்களைத் தேடி வரும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.தாய் வழி சொத்தை பிரிப்பதில் சில மனக்க சப்புகள் உருவாகலாம். சரபேஸ்வரரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
எதிர்காலம் பற்றிய நல்ல முடிவு கிடைக்கும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் நீச்ச பங்க ராஜயோகத்தில் சஞ்சரிக்கிறார். சமுதாய அந்தஸ்து உயரும். கவுரவப் பதவி கிடைக்கும். இது பொருளாதார வளர்ச்சியையும் ஏற்றத்தையும் தரக்கூடிய அமைப்பாகும். தாராள தன நிறைவு உண்டாகும். குடும்ப உறவுகளிடம் மதிப்பு மரியாதை கூடும். இழுபறியாக இருந்த முயற்சிகள் வெற்றி தரும். ஸ்திர சொத்துக்கள் சேரும். இதுவரை சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புத்திரப் பேறு உண்டாகும். வெற்றி கை நழுவும் போது புகழ் மரியாைதை குறையும் என்பதை உணர்வீர்கள். கடுமையான முயற்சியையும் போராட்டத்தையும் சந்தித்த காலம் முடியும். குறைந்த உழைப்பில் அதிக வருமானம் கிடைக்கும். 15.11.2026 அன்று அதிகாலை 3.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப கடமைகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவீர்கள். கிருஷ்ணரை வழிபடுவதால் குடும்ப இன்னல்கள் குறையும்.
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி புதன் பல வருடமாக எதிர்பார்த்த ஒரு இடப்பெயர்ச்சி தந்து உங்களுக்கு மகிழ்ச்சியை தருவார். வீடு மாற்றம், வேலை மாற்றம் போன்ற இடப்பெயர்ச்சிகள் நடைபெறும். எதிர்காலம் பற்றிய நல்ல முடிவு கிடைக்கும். மனபலம், தைரியம் ஞாபக சக்தி தன் நம்பிக்கை அதிகரிக்கும். இலக்கை அடையும் முயற்சி வெற்றி தரும். தொழில் முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் என பல புதிய மாற்றங்கள் ஏற்படும். சமுதாய அந்தஸ்து உயரும். கவுரவப் பதவி கிடைக்கும். திருமண முயற்சி சித்திக்கும். புதிய சொத்துக்கள், உயர் ரக வாகனங்கள் சேரும். குடும்ப பெரியோர்களின் அன்பும் நல்லாசியும் கிடைக்கும். பொன், பொருள் சேரும். 15.11.2026 அன்று அதிகாலை 3.11 முதல் 17.11.2026 அன்று பகல் 3.30 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அடுத்தவரின் குறுக்கீடு மிகுதியாகும். சிறு சிறு மன உளைச்சல் அசதி அலுப்பு இருக்கும். தினமும் அனுமார் வழிபாடு செய்வதால் இன்னல்கள் நீங்கும்.
சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, செவ்வாய், கேது சேர்க்கை உள்ளது. கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. காதல் கலப்பு திருமணம் அதிகமாக இருக்கும். எதிர்பாலின நட்பை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும். புதிய தொழிலில் பார்ட்னர்கள் வரலாம். பழைய பார்ட்னர்கள் வெளியேறலாம். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். தம்பதிகள் கருத்து வேறுபாட்டை தவிர்த்து அனுசரித்து செல்வது நல்லது. எதையும் சமாளிக்கும் தைரியத்தையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டால்குடும்பம் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்ததாக இருக்கும். அரசியல் பிரமுகர்கள் எதிர்பார்த்த பதவியும், பொறுப்பும் வந்து சேரும். 17.11.2026 அன்று பகல் 3.30 மணி முதல் 19.11.2026 அன்று நள்ளிரவு 12.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கோபமான உங்களது பேச்சால் குடும்பத்தில் சலசலப்பு அதிகமாகும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். பிள்ளையாரை வணங்குவதால் சகல விதமான நன்மைகளும் கூடும்.