

எதிர் நீச்சல் போட்டு பெற்றி பெறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் பஞ்சம ஸ்தானத்தில் குரு மற்றும் கேதுடன் சேர்க்கை பெற்றுள்ளார். அமோகமான மாற்றங்கள் ஏற்படும். தைரியம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புத்தி சாதுர்யத்தால் சில காரியங்களை சாதிப்பீர்கள். பிறர் புகழ வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும். சமூக சேவை புரிப வர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். முதலீட்டாளர்களுக்கு வெளியூர் அல்லது வெளிமாநில வேலை தொடர்புகளால் ஆதாயம் உண்டு. வாகனத்தில் பழுது நீக்கம் செய்வீர்கள். ஆரோக்கிய முன்னேற்றம் மனதை மகிழ்விக்கும். 10.11.2026 அன்று அதிகாலை 2.48 முதல் 12.11.2026 அன்று அதிகாலை 2.19 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கணவன் மனைவி விசயத்தில் சம்பந்தமில்லாத நபர்களின் குறுக்கீடு வரலாம். புதிய முயற்சியைத் தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு. இல்லத்தில் சுப நிகழ்வுகள் வரலாம். சஷ்டி விரதம் இருந்து தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.
உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் காலம். ராசி அதிபதி சுக்கிரன் நீச்சபங்க ராஜயோக பெறுகிறார். உங்களின் கற்பனை, கனவுகள் நனவாகும். தொழில், உத்தியோகத்தில் நிலவிய நெருக்கடிகள் விலகி மேன்மைகள் உண்டாகும். சிலருக்கு பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். விவசாயிகளுக்கு தடைபட்ட குத்தகைப் பணம் கிடைக்கும். சிலர் சொத்தை அடமானம் வைத்து முதலீட்டை அதிகரிப்பீர்கள். இழுபறியில் நின்ற தந்தைவழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும். புதிய தொழில் முயற்சியில் அனுபவஸ்தர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது உத்தமம். சுகம், மற்றும் அதிர்ஷ்டத்தின் மேல் நாட்டம் அதிகரிக்கும். குல தெய்வ அனுகிரகம் உள்ளது. 12.11.2026 அன்று அதிகாலை 2.19க்கு சந்தி ராஷ்டமம் ஆரம்பிப்பதால் நினைப்பதற்கு மாறான பலன்களை நடத்தும் என்பதால் சிந்தித்து செயல்பட வேண்டும். சஷ்டி விரதம் இருந்து முருகனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.
திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடையும் வாரம். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதிர்ஷ்டம் இப்பொழுது உங்களுக்கு வசப்படும். தொட்டது துலங்கும். உபரி வருமானத்தால் பொருளாதார நிலை உயரும். கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். சுப நிகழ்வுகளுக்கு தேவையான பணம் எதிர்பார்த்த இடத்தி லிருந்து கிடைக்கும். சொந்த வீட்டுக் கனவு நினைவாகும். பூர்வீகத்திற்கு சென்று வரும் வாய்ப்புகள் உள்ளது. அழகு, ஆடம்பர பொருட்களை விற்பவர்களுக்கு ஆதாயம் அதிகமாக இருக்கும். பிள்ளைகளுக்கு திருமணம், வளைகாப்பு, நல்ல உத்தியோகம், உயர் கல்வி போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு உற்சாகத்தை அதிகரிக்கும். ராகு கேது பெயர்ச்சி சுமாராக உள்ளதால் பொறுமை மற்றும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என சுய ஜாதக தசா புக்திக்கு ஏற்ற மாற்றம் உண்டாகும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. சஷ்டி விரதம் இருந்து முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபடவும்.
ஆதாயமான வாரம்.ராசியில் எந்த கிரகமும் இல்லை ராசியை எந்த கிரகம் பார்க்கவில்லை. பொதுவாக ராசியை எந்த கிரகமும் பார்க்காமல் இருக்கும்போது தடைபட்ட செயல்களை செய்து முடிப்பது நல்லது. நிதானமும், நம்பிக்கையும் உங்களை காப்பாற்றும். முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் தொழில், உத்தியோகத்தில் நிலவிய தாமதம், மந்த நிலை அகலும். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேன்டும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாகும். ராசிக்குள் கேதுவும் ஏழாம் இடத்திற்குள் ராகுவும் நுழை வதால் அடுத்தவர் விஷயத்தில் தலை யிடாமல் இருப்பதுடன் யாரையும் நம்பக்கூடாது. கேளிக்கையான உல்லாச பயணங்கள் நடைபெறும். புதிய முயற்சிகளை ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்ய வேண்டும். ஆரோக்கியத்தை பேணுவது அவசியம்.சஷ்டி விரதம் இருந்து புனித நீரால் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.