

வளமான பலன்கள் நடைபெறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் சுக ஸ்தானம் சென்று குருவுடன் சேர்க்கை பெறுகிறார். குரு மங்கள யோகத்தால் நினைத்தது நிறைவேறும். கௌரவம் அந்தஸ்து உயரும். தடை தாமதங்கள் விலகும். அதிர்ஷ்டம் அரவணைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். முக்கிய குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தடைபட்ட அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி கைக்கு வரும். சிலருக்கு இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தம்பதிகளுக்குள் நிலவிய கருத்து வேறுபாடு மறையும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். பௌர்ணமி அன்று முருகப் பெருமானை வழிபட நன்மைகள் பெருகும்.
உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரனுக்கு நீச்ச பங்க ராஜயோகம் பெற்ற செவ்வாயின் நான்காம் பார்வை பதிகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிரிந்த உறவுகள் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கடந்த கால பிரச்சினைகள் விலகி முன்னேற்றமான நிலை உண்டாகும். சிலருக்கு கவுரவப் பதவிகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளு குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். அரசாங்க பணி முயற்சி சாதகமாகும். மங்களகரமான சுபகாரிய முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெறும். 21.9.2026 அன்று இரவு 11.15 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் சிக்கல்களை குறைத்துக் கொள்ள முடியும். அஜீரண கோளாறு ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பௌர்ணமி அன்று குல தெய்வத்தை வணங்க மேன்மை உண்டாகும்.
எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும் வாரம். வாரத்தின் முற்பகுதியில் உச்ச பலம் பெற்ற ராசி அதிபதி புதன் வார இறுதியில் பூர்வ புண்ணிய ஸ்தானம் சென்று சுக்கிரனுடன் இணைகிறார். உங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் உண்டாகும். திருமண முயற்சி வெற்றி தரும். புத்திர பிராப்தம் உண்டாகும். புதிய சொத்துக்கள் சேரும். மாமனாரால் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அழகு, ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகமாகும். தாய், தந்தை மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உயர் கல்வி கற்பதில் நிலவிய தடை, தாமதங்கள் தாமாக விலகும். ஆரோக்கியத்திற்கு சற்று அதிக முக்கியத்துவம் தருவது நல்லது. 21.9.2026 அன்று இரவு 11.15 முதல் 23.9.2026 அன்று இரவு 9.57 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில், வேலையில் அவசரம் காட்டாமல் சிந்தித்து செயல்படவும். பௌர்ணமி அன்று விரதம் இருந்து மீனாட்சி அம்மனை வழிபடவும்.
செல்வம், செல்வாக்கு மேலோங்கும் வாரம். 5, 10-ம் அதிபதி செவ்வாய் ராசியல் நீச்ச பங்க ராஜயோகம் பெறுகிறார். தைரியம், தெம்பு அதிகரிக்கும். தடை, தாமதங்கள் விலகும். தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் நேரமிது. பணப் புழக்கம் மிகுதியாக இருக்கும். கடன் தொல்லை குறையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். வியாபாரத்தில் முன் நின்று போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையில் இடமாற்றம் ஏற்படும். பிறந்த வீட்டாரும், புகுந்த வீட்டாரும் ஒன்றாக கலகலப்பாக பழகுவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்விற்கான அறிகுறிகள் தென்படும். ஆரோக்கியம் சீராகும். 23.9.2026 அன்று இரவு 9.57 முதல் 26.9.2026 அன்று காலை 5.33 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத் துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். வீண் அலைச்சல் தூக்கமின்மை அதிகமாகும். பௌர்ணமி அன்று விரதம் இருந்து சிவசக்தியை வழிபடவும்.