

தடை தாமதங்கள் விலகும் வாரம். வார இறுதியில் ராசிக்கு சுக்கிரனின் சம பார்வை கிடைக்கும். ஆத்ம ஞானம் கிடைக்கும். வாக்கு வன்மை உண்டாகும். நினைப்பதெல்லாம் உடனே நடக்கும். தலைமைப் பதவிகள் தேடி வரும். சிலருக்கு அரசியல் ஆர்வம் துளிர் விடும். எதிர்ப்புகள் போராட்டங்களை எதிர் நீச்சலடித்து வெற்றி பெறுவீர்கள். உங்களின் உழைப்பிற்கும், முயற்சிக்கும் உரிய பலன்கள் வந்தடையும். சிலருக்கு உழைத்து என்னத்த கண்டோம் என்ற சலிப்பு மேலோங்கும். அரசின் ஒப்பந்தாரர்களுக்கு ஆதாயம் மிகுதியாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் ஒத்திப் போகும். வீட்டு வாடகை உயரும். கடன் தொல்லை குறையும். ஆரோக்கியம் மேம்படும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். விவசாயிகளுக்கு வறண்ட நிலம் செழிப்பாகும். சிலர் தவணை முறையில் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவார்கள். முன்னோர்களின் பரம்பரைச் சொத்து, வங்கி சேமிப்பு இவற்றை பிரிக்க உற்றார் உறவினர்கள் உங்களை அணுகுவார்கள். பவுர்ணமி அன்று விரதம் இருந்து முருகனை வழிபடவும்.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியாகவும் சிறப்பானதாகவும் நடந்து முடியும். ராசி அதிபதி சுக்கிரன் வார இறுதியில் ஆட்சி பலம் பெறுகிறார். வியாபாரிகளுக்கு வருமானம் இரட்டிப்பாகும். வெளியூர் வேலைக்கு சென்ற சிலர் வேலை பிடிக்காமல் சொந்த ஊருக்கே திரும்புவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நிலுவையில் உள்ள பழைய சம்பள பாக்கிகள் வசூலாகும். சிலர் கண்களில் அறுவை சிகிச்சை செய்யலாம். அரசின் நலத்திட்டத்தில் வீடு, மனை கிடைக்கும். உங்கள் பெயரில் எதிரிகள் ஏற்படுத்திய கடன் தொல்லை அகலும். வருமானத்தில் பெரும் பங்கு கடனுக்கு செல்கிறதே என்று வருந்திய நிலைமாறும். கடன், நோய், எதிரி தொல்லை அகலும். நான்கில் கேது மற்றும் 10-ல் ராகு உள்ளதால் அரசியல்வாதிகள் கூட்டணி கட்சிகளுடன், நண்பர்களுடன் எச்சரிக்கையாக பழக வேண்டும். துரோகங்கள், ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளை உங்களின் நேரடி கவனிப்பில் வைத்திருப்பது அவசியம். பார்த்துச் சென்ற வரனிடம் சாதகமான பதில் வரும். பவுர்ணமி அன்று விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபடவும்.
எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும் வாரம். ராசி அதிபதி புதன் வெற்றி ஸ்தானத்தில் வெற்றி ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். மேலும் தன ஸ்தானத்தில் குரு நிற்பதால் தொழில் மற்றும் உத்தியோக உயர்வில் சாதகமான பலன் உண்டு. சிலர் புதிய வேலைக்கு மாறலாம். வியாபாரிகளுக்கு விற்பனை கூடி அதிக லாபம் காண்பார்கள். தொல்லை கொடுத்த போட்டியாளர்கள் விலகுவார்கள். கோட்சார ராகு கேதுவால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அரசியல் பிரமுகர்களுக்கு சந்தோசமான வெற்றிச் செய்திகள் தேடி வரும். எதிர்கட்சியினர் கூட தேடி வந்து நட்பு பாராட்டுவார்கள். சிலரது காதல் பிரிவினையில் முடியும். திருமணம் ஆகாத ஆண், பெண்களுக்கு நல்ல வரன் அமையும். புத்திர பாக்கியம் உண்டாகும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் பாகப்பிரி வினை, வில்லங்கம், விவகாரம் இல்லாமல் சுமூகமாக முடியும். விலையுயர்ந்த பொருட்களை இரவல் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்கவும்.பவுர்ணமி அன்று மகாவிஷ்ணுவை வழிபடவும்.
பொருளாதாரம் மேன்மை உண்டாகும் வாரம். தன ஸ்தான அதிபதி சூரிய பகவான் ஆட்சி பலம் பெற்றுள்ளார். புதிய தொழில் தொடங்க உகந்த காலம். குடும்பத்தில் நிலவிய சிக்கல்கள், பிரச்சனைகள் விலகும். பணத் தட்டுப்பாடு குறையும். தொழில் துறையில் தேக்க நிலை இருக்காது. தொழிலில் உழைப்புக்கு கைமேல் பலனாக பணம் வந்து குவியும். பண நெருக்கடி காலத்தில் விலகிய உறவுகள் மீண்டும் வந்து ஒட்டி உறவாடுவார்கள். உயர்வு உண்டாகும். சத்ருக்கள் தொல்லை அகலும். என்றோ வாங்கி வைத்த பங்குகளின் மூலம் கணிசமான ஆதாயம் உண்டாகும். கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தால் திருமணத் தடை ஏற்படலாம். கற்பனைக் கவலை கள் உண்டாகும். எந்த பிரச்சினை வந்தாலும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை உண்டாகும். அதிர்ஷ்டத்தைத் தேடுபவர்களுக்கு திறமை, முயற்சி, பொறுமை, உழைப்பு ஆகியவற்றால் வெற்றி பெரும் சூட்சமத்தை ராகு கேதுக்கள் கற்றுக் கொடுப்பார்கள். மாமன், மைத்துனர் வழியில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பிள்ளைகளின் படிப்புச் செலவு கூடும். பவுர்ணமி அன்று ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வழிபடவும்.