திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம் இன்று நடக்கிறது

இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை யாகம் நடைபெறும். சுவாமி, தாயாருக்கு பல்வேறு வகையான மலர்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம் இன்று நடக்கிறது
Published on

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் இன்று (புதன்கிழமை) புஷ்ப யாகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை அங்குரார்ப்பணம், ஆச்சார்ய ருத்விக்வாரணம் நடந்தது. மாலை 6 மணிக்கு சேனாதிபதி உற்சவம், 7 மணிக்கு மேதினி பூஜை, மிருட்சம்கிரஹணம் நடைபெற்றது.

இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு திருமஞ்சனம், மாலை 4 மணி முதல் 6 மணி வரை யாகம் நடைபெறும். இதையொட்டி சுவாமி, தாயாருக்கு பல்வேறு வகையான மலர்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் இரவு 7 மணிக்கு கோதண்டராமசுவாமி, சீதா லட்சுமணருடன் கோவில் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

கோதண்டரார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெற்றது. அப்போது நித்யகைங்கர்யங்களில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் அவர்களை அறியாமல் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதற்கு பரிகாரமாக இந்த புஷ்பயாகம் செய்யப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com