திருத்தணி முருகன் கோவிலில் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா

காவடி மண்டபத்தில் உற்சவர் முருகக்கடவுள் வள்ளி தெய்வயானையுடன் எழுந்தருளினார்.
திருத்தணி முருகன் கோவிலில் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா
Published on: 
Summary

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் மலைக் கோவில் தேர் வீதியில் காணப்பட்டது.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு மலைக்கோவிலில் சாமி தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

அபிஷேகம்

அதிகாலையில் மூலவர் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம் வைர கிரீடம் பச்சைக்கல்மரகத மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

கிருத்திகை

கிருத்திகையை முன்னிட்டு முருகனை தரிசிக்க சென்னை. காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களிலும் படிக்கட்டுகளின் வழியாக நடந்து சென்றும் வழிபட்டனர்.

பக்தர்கள்

ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்தும் சரவண பொய்கை திருக்குளத்தில் பக்தர்கள் புனித நீராடியும் நேர்த்தி கடன் செலுத்தினர். கிருத்திகை மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் மலைக் கோவில் தேர் வீதியில் காணப்பட்டது.

மயில் வாகனம்

காலையில் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகக்கடவுள் வள்ளி தெய்வயானையுடன் எழுந்தருளினார். தொடர்ந்து அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. இரவு 7 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வள்ளி -தெய்வானை சமேதராய்தேர் வீதியில் உலா வந்து காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com