சீனிவாச மங்காபுரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி பார்வேடு உற்சவம்

கலைஞர்கள் பக்தி பாடல்களை பாடினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சீனிவாச மங்காபுரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி பார்வேடு உற்சவம்
Published on

ஸ்ரீவாரி மெட்டு அருகே உள்ள சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வர சுவாமி பார்வேடு உற்சவம் நேற்று நடைபெற்றது. காலை 11 மணிக்கு கோவிலில் இருந்து உற்சவமூர்த்தி ஊர்வலம் ஸ்ரீவாரிமெட்டு அருகே உள்ள பார்வேடு மண்டபத்தை வந்தடைந்தது. அங்கு பார்வேடு உற்சவம் நடைபெற்றது. ஆஸ்தானம் முடிந்து மாலையில் உற்சவர்கள் மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டனர்.

நிகழ்ச்சியில் அன்னமாச்சார்யா திட்டத்தின் கீழ் கலைஞர்கள் பக்தி பாடல்களை பாடினர். பஜனை குழுவினர் பஜனை, கோலாட்டம் நடத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com